2024-25ம் ஆண்டு கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்போது கூட்டுறவு துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்
களுக்கான பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்திடும் வகையில் முதல் பணியாளர் நாள் நிகழ்வு மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் வைத்து மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் /செயலாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே பணியாளர் பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக பணியாளர் நாள் நிகழ்வின் போது மனுக்களை அளிக்கலாம் என மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
