விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நவமால் காப்பேர் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
இந்த ஏரியானது சுமார் 10 ஏக்கருக்கு மேல் நிலப்பரப்பை கொண்டுள்ளது. விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நான்குவழிச்சாலை அமைப்பதற்காக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் DBL- நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளித்தது. அவர்கள் ஒப்புதலின் பேரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மண் எடுத்து முடித்துவிட்டார்கள்.
ஆனால் அன்று முதல் இன்று வரை அந்த ஏரியில் பல இடங்களில் பெரிய பள்ளங்களாக காணப்படுகிறது. இந்த பள்ளங்கள் சுமார் 10 அடி முதல் 15 அடி வரை ஆழம் கொண்டது. மழைக்காலங்கள் வருவதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவித உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பே ஏரி முழுவதும் ஒரே சமநிலையாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.