தேனி மாவட்டம்
ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்கள்
மாநிலம் முழுவதும் பல்வேறு ஊரகப் பகுதிகளுக்கு சென்று முகாம் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லெட்சுமிபுரம் ஊராட்சியில் வி.எல்.கிருஷ்ணசாமி-ருக்மணி அம்மாள் திருமண மண்டபத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம் .பி சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.