வலங்கைமானில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய் சமாதான கொள்கையை கைவிடு என ஒன்றிய அரசை வலியுறுத்தி நடைபெற்று வருகை தந்த சைக்கிள் பேரணிக்கு திமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் எல்லை பகுதியான மாரியம்மன் கோவில் அருகில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய் சமாதான கொள்கையை கைவிடு என ஒன்றிய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சைக்கிள் பேரணி வந்து அடைந்தது.
அப்பேரணியை வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில் குமார் ஆகியோர் சிறப்பான முறையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் திராவிட கழக வலங்கைமான் ஒன்றிய தலைவர் டி. கே. கோவிந்தன், பவானி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.