செய்தியாளர் திமிரி வெங்கடேசன் .
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் நாகவேடு கிராமத்தில்
மத்திய உணவு திட்டம் கொண்டு வந்த பெருந்தலைவரின் பிறந்தநாளில் ஆசிய கண்டத்திலேயே முதன் முதலாக காலை உணவு திட்டம் கொண்டுவந்த தலைவர் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெரும் பள்ளி குழந்தைகளும் பயன்பெறும் விதமாக இன்று திருவள்ளூரில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின்அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கைத்திறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல்
ஆர் காந்தி அவர்களின் ஆணைக்கினங்க ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி ஒன்றியம் நாகவேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியான
CSI பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது
மேலும் நளினா நவக்குமாரி தலைமை ஆசிரியர் தலைமையில் K.முருகேசன்
ஒன்றிய குழு உறுப்பினர் வரவேற்பில்”காலை உணவு திட்டத்தை”
தொடங்கி வைக்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளராக சுந்தரம்மாள் பெருமாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் லட்சுமி பாரி அரக்கோணம் நகர மன்ற தலைவர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு “காலை உணவு திட்டத்தை”
தொடங்கிவைத்தார்
இதில் எஸ்.ஜி.சி.பெருமாள் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர்
மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.