செங்கோட்டையில் காணாமல் போன காரை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்து அசத்திய செங்கோட்டை காவல்துறையினர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வம்பளந்தான் முக்கு கே சி ரோட்டை சார்ந்த மருதப்ப பாண்டியன் என்பவர் தனது காரை அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு காரில் இருந்து சாவியை எடுக்காமல் வீட்டுக்குள் சென்று உள்ளார்,
இதை நோட்டமிட்ட பூலான் குடியிருப்பைச் சார்ந்த ஷேக் முகமது என்பவர் மது போதையில் வீட்டின் காம்பவுட்டுக்குள் சாவியோடு நிற்கின்ற காரை பார்த்ததும் காரின் உரிமையாளருக்கு தெரியாமல் காரை குடிபோதையில் எடுத்து சென்று செங்கோட்டை ஃபாரஸ்ட் செக் போஸ்ட் அருகில் தனது நண்பர்களான காலங்கரை, சங்கர சுப்பிரமணியன் தெருவை சார்ந்த கணேசன் மற்றும் பண்பொழியைச் சார்ந்த கிட்டா மணி ஆகிய தனது நண்பர்களை மது அருந்தலாம் எனக் கூறி அந்த காரில் ஏற்றுக்கொண்டு தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் சுற்றி உள்ளனர்,
அதே சமயம் காரின் உரிமையாளர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்து காரை பார்த்த பொழுது அது காணாமல் போனதை அறிந்து உடனடியாக செங்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கிய பொழுது சுமார் 11 மணியளவில் மேற்படி காருடன் மூன்று நபர்கள் கொட்டாகுளம் அருகே செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டை காவல்துறையினர் விரைந்து சென்று காரை மடக்கி பிடித்து மது போதையில் இருந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இச் சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.