திருப்போரூர்
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையுடன், படூர் ஊராட்சி மன்றம் இணைந்து மூத்த குடிமக்களுக்கான ஒரு நாள் இன்ப சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது
60 வயதிற்கு மேற்பட்ட படூர் ஊராட்சியில் உள்ள மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து சென்னையில் உள்ள காமராஜர் நினைவு மண்டபம் காந்தி மண்டபம் கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவகம் முன்னாள் முதல் அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடம் உள்ளிட்டவற்றை சுற்றி பார்க்க ஏற்ப்பாடு செய்யப்பட்டு அதன் துவக்க விழா மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் கலந்துகொண்டு கொடி அசைத்து சுற்றுலா பயணத்தை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய மாற்றத்தை நோக்கி நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர் இன்று ஒரு நாள் மகிழ்ச்சியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள் நீங்கள் இளமையில் இருக்கும்போது இருந்த இடம் தற்போது எப்படி உள்ளது என நினைத்து பாருங்கள் இன்று ஒரு நாள் பொழுதை மகிழ்ச்சியுடன் கழியுங்கள் உங்கள் வசதிக்காக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளார்கள் உங்களுக்கு உணவுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுத்துள்ளோம் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள் என பேசினார்
அதனை தொடர்ந்து மாலை மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் பொழுதை கழிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர் சங்கீத் உட்பட பலர் உடன் இருந்தனர்
சுற்றுலா செல்லும் மூத்த குடிமக்களுக்கான பேருந்தை தொடர்ந்து மருத்துவ வசதிக்கான ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது