கீழ வீராணம் டி டி டி ஏ பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழ வீராணம் டி டி டி ஏ பள்ளியில் தமிழக முதல்வர் அறிவித்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது
பள்ளி தலைமை ஆசிரியர் ஆபிரகாம் ஞானராஜ் தலைமை தாங்கினார்.
ஊரக வளர்ச்சித் துறை கோகிலா, ஆசிரியர் பயிற்றுநர் பவித்ரா, மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் அமானுல்லா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மகளிர் சுய உதவி குழு தலைவி
உமா மகேஸ்வரி, சமையல் பணியாளர் முத்துலட்சுமி,சுய உதவி குழு நிர்வாகிகள் உச்சிமாகாளி முருகேஸ்வரி,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணிகண்டன் காலை சிற்றுண்டி பணியாளர்கள் முத்துலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் இடைநிலை ஆசிரியர் சகுந்தலா நன்றி கூறினார்.