செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் ஆஷாட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் நேற்று படையல் உற்சவ வைபவம் நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு பலகாரங்களான புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், முறுக்கு, சீடை, அனைத்து வகையான பழங்கள் உள்ளிட்டவை நெய்வேத்யம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.