மதுரை , விமான நிலையம் அருகில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் நகர் ஸ்ரீ பத்திர காளியம்மன் கோவில் 51வது ஆண்டு உற்சவ விழா, சீரும் சிறப்பாக நடைபெற்றது.
அம்பேத்கார் நகரிலிருந்து ஊர்வலமாக திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து மதுரை விமான நிலையம் ரோடு, தேவர் சிலை, பெருங்குடி மெயின் ரோடு, முனியான்டி கோயில், கொண்டித்தொலு, முத்தையா கோயில் தெரு வழியாக ஸ்ரீ பத்திர காளியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஏ.ஆர்.அய்யங்காளை தலைமையில் சென்று பெரிய கண்மாயில் அய்யனார் கோயில் அருகே வழக்கம்போல் முளைப்பாரியை கரைத்தனர்.
முளைப்பாரி ஊர்வலத்தில் கோவில் பூசாரி ஆறுமுகம், மணிமாறன், கணேசன், பாலசுப்பிரமணியன், முத்துமாரி, கணேசன், தெய்வஜோதி, பூக்கடை பாலுராஜ்குமார், மலைச்சாமி, மலைச்சாமி, ரவிச்சந்திரன் கொத்தனார், சங்குப்பாண்டி, போஸ், டிரைசைக்கிள் கண்ணன், முத்தையா கண்ணன், கவிதா, முத்துப்பிள்ளை, பாண்டியம்மாள், காளி, நாகஜோதி, லட்சுமி, மாரியம்மாள், காளீஸ்வரி ராஜ்குமார் உட்பட கிராம மக்கள் முளைப்பாரி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்.