பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஜெ.முகம்மது ரபீக் பிறந்த நாள்-தலைவர்கள் வாழ்த்து
மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ள பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ.முகம்மது ரபீக்கிற்கு பல்வேறு அமைப்பினர்,சமய தலைவர்கள்,அரசியல் கட்சியினர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்..
கோவையை சேர்ந்த ஜெ.முகம்மது ரபீக் பல்சமய நல்லுறவு இயக்கம் எனும் சமூக ஒற்றுமை அமைப்பை உருவாக்கி,அதன் மூலமாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்..
குறிப்பாக கொரோனா கால கட்டங்களில் பல ஆயிரம் மக்களுக்கு உணவளித்து கவனம் ஈர்த்த இவர் ஜூலை 17 இல் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்..
இந்நிலையில்,இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் வாழ்த்து செய்தியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,பல்சமய நல்லுறவு இயக்கம் எனும் அமைப்பின் நிறுவனராக உள்ள பேரூர் தமிழ் கல்லூரியின் முன்னால் மாணவரான முகம்மது ரபீக் சிறந்த சமுதாய தொண்டராக பணியாற்றி வருவதாகவும், ,
அவரது பிறந்தநாளை ஜூலை 17 இல் கொண்டாடி வரும் நிலையில்,அவர் நீண்ட ஆயுள்,நல்ல உடல் நலம்,நிறை புகழ்.,மெய்ஞானம் ஆகியவற்றில் சிறந்த விளங்க இறையருள் கிடைக்க போற்றி வாழ்த்துவதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதே போல கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் தனசேகர்,மௌலவி அல்ஹாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி,மற்றும் டோனி சிங் உட்பட பல சமய தலைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்…