கோவில்பட்டி மந்திதோப்பு சாலை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்;ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் மந்திதோப்பு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அண்ணாமலை நகர் பகுதியில் வந்த லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்த போது அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதும் தெரியவந்தது.
இதையெடுத்து லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்தி சென்ற வெள்ளாலங்கோட்டையை சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் பால்ராஜ்(46) என்பவரை போலீசார் கைது செய்து, கடத்தி செல்லபட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.