சங்கரன்கோவில்.
ஆடித்தபசு திருநாளில் 7ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு கோமதி அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருநாள் கடந்த ஜூலை 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடித்தபசு 7 ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கோமதிஅம்பாள் கோ சம்ரக்ஷனை அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து காலை 11:45 மணிக்கு ஸ்ரீ வன்மீக நாதர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோமதி அம்பாள் வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு கோமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.
அதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு மண்டகப்படியில் இருந்து கிளம்பி கோமதி அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பூம்பல்லக்கினைகாண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடு இரவிலும் திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.