திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி,பேத்துபாறை இணைப்பு சாலைக்கான அளவிடும் பணி பேத்துபாறை சாலையில் நடைபெற்றது.
இதில் ஆக்கிரமிப்புகளை சமரசமில்லாமல் அகற்றி மிகச்சிறந்த சாலைக் கொண்டுவர உறுதுணையாக இருப்போம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
சட்டமன்றத்தில் பேத்துப்பாறை கொடைக்கானல் இணைப்புச்சாலை பற்றி பேசி,அதற்கான நடவடிக்கையில் உறுதியாக இருந்து செயல்படுத்திய மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமாருக்கு நன்றிகளைத் பேத்துபாறை பகுதி பொதுமக்கள் தெரிவித்துக் கொண்டனர்.