பழனி நெய்காரப்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள தெரு நாங்களை அப்புரபடுத்த வேண்டி கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள பெரியகலைமுத்தூர்,பெருமாள் புதூர் சாலைகளில் தினம் தோறும் இது போன்று நாய்களினுடைய அணிவகுப்பு.பள்ளிசெல்லும் குழந்தைகள் முதல் பணிக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாகவும்,இந்நாய் கூட்டங்களினால் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நாய்கூட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.