தமிழகமெங்கும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தை யொட்டி திரளான பக்தர்கள் தங்கள் குல தெய்வ கோவில்களில் பொங்கல் வைத்து சிறப்பு இறை வழிப்பாட்டில் ஈடுபடுவது வழக்கம்.அதிலும் குறிப்பக ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை , ஆடி வெள்ளியாக பக்தர்கள் கொண்டாடி அந்நாளில் தங்களது குல தெய்வ கோவில்களிலும்,அம்மன் ஆலயங்களிலும் பொங்கல் வைத்து வழிபடுவர்.
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இன்று ஆடி மாதம் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு,பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்றது.அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரத்தில் கிராம குல தெய்வமாக விளங்கின்ற,பிரசித்தி பெற்ற ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவிலில் ஆடி மாதம் ஆடி முதல் வெள்ளியை ஒட்டி வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,ஸ்ரீ தும்பவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் காலை முதலில் இருந்து நடைபெற்று வருகிறது.
அதையொட்டி காலை முதலிருந்து திரளான பக்தர்கள் தங்களது குடுமத்தார்,உற்றார் உறவினர்களோடு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து,ஸ்ரீ தும்பவனத்தம்மனுக்கு படையலிட்டு சிறப்பு இறைவழிப்பாடு மேற்கொண்டும்,தும்பவனத்தம்மனை மனமுருகி வேண்டி விரும்பிய ம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம்,அதிமுக கழக அமைப்புச்வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினரும் பங்கேற்று ஸ்ரீ தும்பவனத்தம்மனை சாமி தரிசனம் மேற்கொண்டு, கோவில் வளாகத்தில் இருந்த திரளான பக்தர்களுக்கு அன்னதானங்களையும் வழங்கினர்.