ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சிறப்புடன் இயங்கி வரும் ரோட்டரி கிளப் ஆஃப் ஓசூர் கிராண்ட் சார்பாக அனைத்து பகுதிகளும் வேகமாக பரவி வரும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் ஓசூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக மக்கள் பெருமளவு கூடும் இடங்களான இரயில் நிலையம், பஸ் நிலையம், ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிகள், முக்கிய வியாபார ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கும் பணியில் ரோட்டரி கிளப் ஆஃப் ஓசூர் கிராண்ட் தலைவர் K.ரவிச்சந்திரன், செயலாளர் பிரணவ், பொருளாளர் J.வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.