பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கஞ்சி மேடு ஸ்ரீ செல்வ மகா காளியம்மன் ஆலய 19 -ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா..
திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கஞ்சிமேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வ மகா காளியம்மன் ஆலய 19ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து நூற்றுக்கனக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பாடை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் கஞ்சிமேடு அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கஞ்சமேடு செல்வ மகா காளியம்மன் திருக்கோயில் அறக்கட்டளையினர் மற்றும் கிராமவாசிகள், நாட்டாமைகள் இளைஞரணியினர் செய்திருந்தனர்.