செய்தியாளர்: பா சீனிவாசன், வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் ஆசியன் மெடிக்கல் அகாடமியில் மாணவர்களுக்கான கேலி வதை தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ரேகிங்கினால் வரும் இழப்புகள் குறித்து நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் அகாடமி நிலைய முதல்வர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் கு.சதானந்தன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, மூத்த வழக்கறிஞர் சா.இரா. மணி பங்கேற்று, ராகிங்கினால் வரும் கொடுமைகள் மற்றும் இழப்புகள் குறித்தும் விழிப்புணர்வு உரை ஆற்றினார். அகாடமி சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா சீனிவாசன், வந்தவாசி.