விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்காப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு கோ பூஜையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி கும்ப சங்கு அலங்காரம், சிறப்பு ஹோமம், பால் அபிஷேகம், மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.