தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்
மீனாட்சி மருத்துவமனையில் டிராக்டர் விபத்தில் 41/2 வயது சிறுவனின் இடதுகாலில் துண்டிக்கப்படும் அளவிற்கு கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.
நுட்பமான இரண்டு நிலை எலும்பியல் அறுவைசிகிச்சை செய்து துறையின் தலைவரும், முதுநிலை வல்லுநருமான டாக்டர் கே.பார்த்திபன், அத்துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ். சண்முக ஹரிஹரன் ஆகியோர் சிறுவனை காப்பாற்றியுள்ளனர்..
அறுவைசிகிச்சை செய்த டாக்டர். பார்த்திபன் கூறியதாவது,நாகப்பட்டினம் மாவட்டம், பிள்ளையார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த
41/2வயது சிறுவன் ரக்ஷனின் இடதுகாலில் டிராக்டர் ஏறி இறங்கி விபத்தால் எலும்பு இரண்டு துண்டுகளாக முறிந்து, கடும் காயமும் ஏற்பட்டிருந்தது.
கீழ்ப்புற காலிலுள்ள இரண்டு முக்கியமான இரத்தநாளங்களுள் ஒன்று கிழிந்து துண்டாகிவிட்டது.
அருகே தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றபோது, காலை வெட்டியெடுப்பது என கூறியுள்ளனர் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரக்க்ஷனை அனுமதித்தார்கள் காயமடைந்த பகுதியில், இறந்த திசுக்கள், தோல் மற்றும் மாசுகளை அகற்றி மென்திசுக்களுக்கு பாதிப்பின்றி, திறந்த நிலையிலிருந்து காயங்களுக்கு தையலிட்டு, உடைந்த எலும்புகள் உரிய நிலையில் இருக்க ஒரு வெளியார்ந்த பொருத்தியை
காலுடன் இணைத்தோம். கீழ்ப்புற காலுக்கு
இரத்தஓட்டம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
தொற்றும் ஏற்படாது. நுட்பமான இந்த அறுவை சிகிச்சைக்கு 3 மணி நேரம் ஆனது என கூறினார். பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரவீன், முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். காத்திகேயன் மகாராஜன் மற்றும் எலும்பியல் சிகிச்சை துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர். பாலகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.