திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் தற்போது படிக்கும் +2 படிக்கும் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியில் உள்ள 450, +2 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான கருத்தாளர்களாக
PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர். பூமா மற்றும்
GTN கலைக்கல்லூரி பேராசிரியரும் முனைவர்.அமுதா தம்முடைய வழிகாட்டுதலை திறம்பட எடுத்துறைத்தனர்.
இந்நிகழ்வை பள்ளி முன்னாள் மாணவர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.இயக்க நெறியாளர் மற்றும் பள்ளித் தாளாளர் அருள்பணி.மரியநாதன் சேசு சபை,பள்ளி தலைமை ஆசிரியர் அருட்பணி.ஆரோக்கிய தாஸ் சேசு சபை இந்நிகழ்ச்சிக்கு வழிகாட்டினர்.
இயக்க செயற்குழு உறுப்பினர்கள் இதில் பலர் கலந்து கொண்டு உதவினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து நடத்திய ஆசிரியர்.ஜெயசீலன் அவர்களுக்கு நன்றியுடன் இறைவணக்கம் பாடிய ஆசிரியர்.ஜேம்ஸ் மற்றும் நன்றி தெரிவித்த ஆசிரியர். மரிய லூயிஸ் சேகர் மற்றும் செயலர்.மைக்கேல் உடனிருந்து உதவினார்.
இறுதியாக மாணவர்களின் கேள்வி நேரத்தோடு நிகழ்வு வெற்றிகரமாகவும் ,இந்நிகழ்ச்சி +2 மாணவர்களின் இலக்குகளான மேற்படிப்பு,எதிர் காலம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும், திட்டமிடவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.