ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் ஆர்ச் அருகில் இந்து முன்னணி ஓசூர் கோட்டம் சார்பாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிக்க கோரி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் கோட்ட இந்து முன்னணி செயலாளர் உமேஷ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்