கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு நல்லிணக்க விழா சுகுணாபுரம் பகுதியில் உள்ள ரெயின்போ காலனியில் நடைபெற்றது..
முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமார் முகமது ஆசிக் முகமது யூசுப் ராஜ்குமார் நிவேதா தனபால் புனிதா காஜா செரீப், மணிகண்டன் ரமேஷ் தீபக் நிர்மலா பாரதி நாகராஜ் கௌரிசங்கர் மணிகண்டன் சம்ரின் உள்ளிட்டோ முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர்,முதியோர், உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..
இதில் தையல் மிஷின் 15 நபர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கு யாருடைய துணையும் இல்லாமல் தாங்களே இயங்கும் விதமாக நவீன கைக்குச்சிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்,அரசி , மளிகை பொருட்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..
இதனை தொடர்ந்து தன்னலம் பாராமல் பணியாற்றிவரும் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
விழாவின் ஒரு பகுதியாக,தமிழர் பாரம்பரிய பறை இசை,சிலம்பாட்டம்,நடனம்,உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன..