நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர் இதில் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தில் சுற்றிச் செல்ல அதிக அளவில் ஆட்டோவை பயன்படுத்தி வந்தனர்
இந்நிலையில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அதிக அளவில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் போலீசார் பறிமுதல் செய்து மாவட்ட போக்குவரத்து அலுவலர் மூலம் தலா 20 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்
அதிக கட்டணம் வசூல் செய்த ஆட்டோக்களை பறிமுதல் செய்த காவல்துறையினருக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்