வலங்கைமான் வட்டார தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், லேப் டெக்னீசியன், மார்ச்வேரி ஊழியர், இரவு நேர மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற 18-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற 18-வது மாநாடு நடைபெற்றது.
விழாவிற்கு சுதாகர் லெனின் விஜய் அபர்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் துறை அருள் ராஜன் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார்,
மாநாட்டை தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கே. கேசவ ராஜ் , தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் 33 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்களும், ஏழு பேர் கொண்ட பொறுப்பாளர்களையும், தலைவராக கே சுதாகர், செயலாளராக வி. பாக்கியராஜ், பொருளாளராக பீ.டி. ஸ்ரீகாந்த், துணைத் தலைவர்களாக சி.விஜய், காரல் மார்க்ஸ், துணைச் செயலாளர்களாக லெனின், பிரசாந்த் ஆகியோரை பொறுப்பாளர்களாக அறிவித்து வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாநாட்டில் திருச்சி டூ நாகப்பட்டினம் செல்லும் பைபாஸ் சாலை நார்த்தங்குடியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது,ஆகவே அங்கு தற்காலிகமாக ரவுண்டானாவும், நிரந்தரமாகமேம்பாலமும் அமைக்கப்பட வேண்டும், ஆலங்குடி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து,இரவு நேர மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், வலங்கைமான் வட்டார தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், லேப் டெக்னீசியன், மார்ச்வேரி ஊழியர், இரவு நேர மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாவீரன் பகத்சிங் பெயரில் மாற்றப்பட வேண்டும், படித்து பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எம்ப்ளாய்மெண்ட் மூலமாக அரசு பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு முடிவில் புதிய தலைவர் கே. சுதாகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.