உத்தமபாளையம் அருகே புனித பனிமைய அன்னை திருத்தலம் தேரோட்டம்
ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன் பட்டியில் அமைந்துள்ள புனித பனிமைய அன்னை திருத்தலம் 123 ஆண்டுகள் பழமையானது. தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்த கிறிஸ்துவ ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமணி ரோமில் இருந்து கொண்டுவரப்பட்டது
கூடுதல் சிறப்பாகும். இந்த திருநாளில் ராயப்பன் பட்டி புனித பணி மைய மாதா ஆலயத்தில் இருந்து தேரை நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து
இழுத்து ராயப்பன் பட்டியின் பிரதான வீதிகளில் இழுத்துச் சென்று மீண்டும் தேர் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது. இந்த புனிதமான நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்