அரியலூரில் டால்மியா பாரத் சிமென்ட் ஆலையின் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஆர். ஆனந்த் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசுகையில், இளைஞர்களை மேம்படுத்தி, அவர்களின் திறனைத் வெளிகொண்டுவருவதற்கு டால்மியா பாரத் லிமிடெட் நிறுவனம் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த டால்மியா பாரத் அறக்கட்டளையுடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது நமது கிராமப்புற சமூகங்களில் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்றார்.
டால்மியா சிமென்ட் பாரத்தின் அரியலூர் பிரிவுத் தலைவர் டி ராபர்ட் பேசுகையில், இந்த திறன் பயிற்சி மையம் மூலம் ஆண்டுதோறும் 240 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது, வீட்டு சுகாதார உதவியாளர், உதவி எலக்ட்ரீஷியன் மற்றும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, எலக்ட்ரீசியன் மற்றும் ஹோம் ஹெல்த் எய்ட் டிரேடுகளில் தலா 30 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள சூரிய சக்தியில் இயங்கும் டிஜிட்டல் கற்றல் ஆய்வகம், கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மின்}கல்வியை மேம்படுத்துகிறது.
இந்த தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட வாகனங்கள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பயிற்சியை நேரடியாக சமூகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே பயிற்சி வெற்றிக்கரமாக முடிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் மாவட்ட அபிவிருத்தி முகாமையாளர் பிரபாகரன், பாரத ஸ்ட்டேட் வங்கியின் திறன் பயிற்சி மைய உதவி இயக்குநர் ந.ரவிச்சந்திரன், பயிற்சியாளர் எம்.செல்வம், டால்மியா பாரத் சிமென்ட ஆலையின் தொழில்நுட்பத் தலைவர் சங்கரப்பா, மனித வளத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.