செங்குன்றம் செய்தியாளர்
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதனை ரத்து செய்ய எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் அதிமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதவரம் பஜார் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் ரேஷன் கடைகளில் எண்ணெய் , பருப்பு வகைகளை தவறாமல் கொடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாதவரம் பகுதி செயலாளர் வேலாயுதம், கண்ணதாசன்,வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் தமிழரசன் திருவெற்றியூர் குப்பன் அஜாக்ஸ் பரமசிவம் மற்றும் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் என சுமார் 500 மேற்பட்டோர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசிற்கு எதிராக கோஷமிட்டனர் .