திருநெல்வேலியில் நடை பெற்ற பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வென்ற ரயில்வே அணியினரை, மதுரை கோட்ட மேலாளர் பாராட்டினார்.
திருநெல்வேலியில் கடந்த ஜூலை 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நெல்லை பிரீமியர் லீக் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ரயில்வே டிவிஷன் அணியினர் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் இந்த அணியினர் இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
இதையடுத்து மதுரை ரயில்வே டிவிஷன் அணியினர், கோட்ட ரயில்வே மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவாவை சந்தித்ததனர்.
அப்போது வெற்றி பெற்ற வீரர்களை அவர் பாராட்டினார். இந்த சந்திப்பின்போது, தெற்கு ரயில்வே விளையாட்டு சங்க செயலாளர, ஸ்ரீசங்கரன், அணித் தலைவர் இசக்கி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.