விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூர் பகுதியில் போலிசாருடன் ரோந்து சென்ற சேத்தூர் சார்பு ஆய்வாளர் அங்கீஸ்வரன் சொக்கநாதன்புத்தூர் சர்ச்சுக்கு பின்புரம் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது அவரை தீவிரமாக விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த தங்க ஒளி மகன் செந்தில்குமார்(37) என்பதும் கேரளாவிலிருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை வாங்கிவந்து இங்கு விற்பனை செய்வதாக தெரிந்தது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரிடமிருந்து ரூபாய் 40 விலையுள்ள 480 லாட்டரி சீட்டுகளை (மொத்தம் 19’500 ரூபாய் மதிப்புள்ள) பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்