தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அறிவுஎழில் மற்றும் இலஞ்சி குமார கோயில் நிர்வாக அலுவலர் சுசிலா ராணி ஆகியோரின் அறிவுறுத்தலோடு குற்றாலம் காவல்துறையினர் போக்குவரத்து இடையூறாக கடைகள் உள்ளதாக கூறி அகற்ற முற்பட்டபோது கடைகளில் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதனால் குற்றாலம் செங்கோட்டை சாலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது இப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது