தென்காசி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஐடிவிங் மண்டல செயலாளர் சிவா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்..