பெங்களூரில் 13வது சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2024 ஜூலை 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து
600க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரர், வீராங்கனைகள் பங்கு
கொண்டனர்.
ஊனத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக 38 பாரா தடகள வீரர், வீராங்கனைகள் 100மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டு தல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டிஎறிதல் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 10தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை குவித்துஅகில இந்திய அளவில் 5-ம் இடம் பிடித்தனர்.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனை களான அபர்னா பிரிவு13-ல் 100மீ, குண்டு எறிதலில் 2 தங்கப்பதக்கமும், ஹரிவேந்திரபிரபு பிரிவு44-ல் நீளம் தாண்டுதலில் 1 தங்கப்பதக்கமும், வருண் பிரிவு 44-ல் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும், வட்டு எறிதலில் வெண்கல பதக்கமும்,அகிலேந்திரன் பிரிவு12-ல் ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கமும், குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும், மணியரசு பிரிவு55-ல் ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கமும், கார்த்திகேயன் பிரிவு 11-ல் குண்டு எறிதல், வட்டு எறிதலில் 2 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
தேசிய போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீரர்களை உருவாக்கிய தியான்சந்த் விருது பெற்ற மாற்றுத் திறனாளி பயிற்சியாளர் ரஞ்ஜித்குமார் மற்றும் தீபா மற்றும் வீரர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனைவருக்கும் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.