எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பூம்புகார் கல்லூரியில் 3.99 கோடி மதிப்பிடில் 24 வகுப்பறைகட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் 24 வகுப்பு கொண்ட புதிய கட்டடத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது.
கல்லூரியில் போதுமான கட்டட வசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்டி தர கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு துவங்கப்பட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 24 வகுப்பறைகள் கொண்ட 3.99 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் காணொளி கட்சிகள் வாயிலாக திறந்து வைத்தனர்.
தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற திறப்பு விழாவில் மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் , இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர்கள் முருகன், அன்பரசன் , கல்லூரி முதல்வர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்காக கட்டிடத்தை திறந்து வைத்தனர்.