திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி சாலை பகுதியில் உள்ள மேல்பள்ளம் மற்றும் வடகவுஞ்சி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேல் அவ்வப்போது மழையுடன் காற்று வீசுவதால் தொடர் மின் வெட்டு மற்றும் சாலைகளில் மரங்கள் சாய்வதும், காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்தனர்.
இதனை முறையாக சரிசெய்து தொடர் மின் இனைப்பு தர வேண்டி மின்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை பொருட்படுத்தாமல் எவ்வித நடவடிக்கையும் இன்றி தொடர்ந்து பத்து நாட்களாக மின் இணைப்பு இன்றி பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பானது.
இதற்கான முறையான நடவடிக்கை எடுக்க வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
இம்மறியலை அறிந்த மின்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவம் இடத்தில் விரைந்து வந்து விசாரணை செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தபின் சாலை மறியலை கைவிட்டனர்.