திண்டுக்கலை அடுத்த வக்கம்பட்டியில் ஆத்தூர் கூட்டுறவு கல்லூரியில் 2024-2025 ஆண்டிற்கான முதலாமாண்டு வகுப்பு மாணவர்களுக்கான தொடக்க விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக கழக ஆட்சியில் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையில் கலைஞர் ஆட்சியில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.
தற்போது 5 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு 6 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. ஆத்தூர் தொகுதிக்கு மட்டும் 2 கல்லூரிகள்.
மனிதனுக்கு வழிகாட்டுவது கல்வி மட்டுமே. எனவே கல்வியை இடைநில்லாது தொடர வேண்டும்.
இங்கு உள்ள மாணவர்கள் நாளை அமைச்சர்களாக வரலாம், உயர் அதிகாரிகளாக வரலாம். நமது தமிழகத்தில் சமத்துவம் உள்ளது.
அவரவர் வாழ்க்கையை அமைத்து கொடுப்பது கல்வி தான் இந்த ஆண்டு நத்தம் பகுதிக்கு ஒரு அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டு உள்ளோம். முன்னேற்றம் மாணவர்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.
அது கல்வியில் உள்ளது. இந்த ஆத்தூர் கல்லூரியில் பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. ரூ.75 கோடியில் கட்டப்பட்டு வருகிறது ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி, விரைவில் உயர்கல்வியும் கொண்டுவரப்படும். இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.