திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாபநாசம் சாலை பகுதிகளில் தேங்கும் மழை நீர் வெளியேறும் விதமாக 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மழைநீர் செல்லும் விதமாக இரு புறங்களிலும் சிறிய அளவிலான சுவர்கள் அமைக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் சிலாப்புகள் பொருத்தி மக்கள் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முதல் கட்டமாக பழுதடைந்த நிலையில் இருந்த மழை நீர் கட்டமைப்பு அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.