தென்காசி தமிழக வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் சந்தித்து. முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேல் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில்ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற இருக்கிற திருவிழாவிற்கு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பத்து நாட்கள் தங்கி பத்து நாள் திருவிழாக்களையும் கண்டு களித்து வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்கள்.
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை மூலம் பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறார்கள் . வாகனங்கள் கோவிலுக்கு செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் விதித்தும் குடில்கள் அமைப்பதற்கு தடை விதித்தும் வருகிறார்கள்..இது சம்பந்தமாக வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் (திருநெல்வேலி தென்காசி பொறுப்பு அமைச்சர்கள்) ஆகியோரிடம் இன்று மனு வழங்கினார்.. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் வனத்துறை அமைச்சர் அவர்களிடம் தொலைபேசியில் பேசினார்கள் அமைச்சர் அவர்களும் இது சம்பந்தமாக ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது .
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்க சொல்லுங்கள் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க வேண்டியது இருக்கிறது என்கிற தகவலை சொன்னார்கள்பின்னர் வனத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர் அவர்கள் பரிந்துரை செய்து கொடுத்த கடிதத்தை வனத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார்
கடந்த ஆண்டு இதேபோல் ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில் ஐந்து நாட்கள் கோவிலில் தங்கி சாமி கும்பிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது..உங்கள் மனுவி ல் கண்டுள்ளபடி கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் எனில் தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டிய இருக்கிறது..எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனுக்களை வழங்கச் சொல்லி உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறித்தினார்கள்.
பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் அண்ணாச்சி கே கே எஸ் எஸ் ஆர் மற்றும் நிதித்துறை அமைச்சர் அண்ணன் தங்கும் தென்னரசு ஆகியோரை சந்தித்து விபரத்தைச் சொன்னார் அமைச்சர் பெருமக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் விரைவான மக்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் சிவ பத்மநாதனுக்கு அகஸ்தியர் அருவி மீட்பு குழு மற்றும் பொதுமக்களும் பக்தர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்