விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தது.
இதன் காரணமாக ஆற்றில் இருந்து குடிநீர் தேக்கத்திற்கு பிரித்து எடுக்கப்படும் தடுப்பணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு இதுவரை ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மேல் நீர்த்தேக்கத்தில் 15 அடி நீர் நிரம்பி காணப்படுகிறது.
இதிலிருந்து பெறப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நேரடியாக எந்தவிதமான உந்து சக்தி இல்லாமல் நேரடியாகவே நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு ஏற்றி முறையாக நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நிரம்பியுள்ள தண்ணீர் இன்னும் ஆறு மாத காலத்திற்கு மேல் குடிநீர் விநியோகத்திற்கு கிடைக்கும் எனவும், இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் இருக்காது எனவும் கூறப்படுகிறது. மேலும் வரும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை மேலும் பெய்யத் தொடங்கும் சமயத்தில் மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகும் என நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் அறிவிப்பு