தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் கம்பம் நகரில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் துவக்கி வைத்தார்
தேனி மாவட்டம் கம்பம் குமுளி ரோட்டில் அமைந்துள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த கருத்தரித்தல் முகாமில் கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள ஏராளமான குழந்தை இல்லாத பெண்கள் முகாமில் பங்கேற்று பரிசோதனைகள் செய்து பயன் பெற்றனர்
முகாமில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் முகாமிற்கு வந்த பொதுமக்களை கனிவுடன் உபசரித்து பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினார்கள்.
கம்பம் வடக்கு நகர முன்னாள் திமுக செயலாளரும் வழக்கறிஞருமான துரை நெப்போலியன் நன்றி கூறினார்.