திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி இளைஞர்கள் சங்கங்கள் சார்பாக மீண்டும் தெருநாய்கள் தொல்லைகள் மற்றும் தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் நடவடிக்கை எடுக்கும்படி பேரூராட்சி நிர்வாகத்திடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது
பல விபத்துக்கள் ஏற்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை இன்று காலை மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது அதை முன்வைத்து மற்றொரு முறை மனு அளிக்கப்பட்டுள்ளது
இன்னும் விபத்துக்கள் அல்லது உயிர் பலிகள் ஆன பின்பு தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்
ஆர் ஆர் மில் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தடுத்து நிறுத்தினால் இதுபோல் விபத்துக்கள் அந்தப் பகுதிகளில் ஏற்படாமல் இருக்கும்
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அவர்களுக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவீர்கள் என்று நம்பிக்கையோடு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.