திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பாளையம்,மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயி நம்பி வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான விலை நிலங்கள் ஆரணி ஆறு கரை ஒட்டி சுமார் 500க்கும் மேற்பட்ட விலை நிலங்கள் உள்ளது.இந்த இதில் வெண்டைக்காய், கத்தரி, முள்ளங்கி,கீரை வகைகள், மல்லி, முல்லை, சாமந்தி உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பட்டா விவசாய நிலங்களில் விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவிட்டு ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு கொண்டு விவசாயம் செய்வார்கள். ஆரணி ஆற்று அருகே உள்ளதால் எப்போதும் இப்பகுதியில் நீர்மட்டம் குறையாமல் இருக்கும் ஆனால் சமீப காலத்தில் இருந்து இந்த ஆரணி ஆற்றில் இரவு, பகல் என பாராமல் மணல் கொள்ளையர்கள் சாக்கு பைகளில் மணல் நிரப்பி அவற்றை பதுக்கி வைத்து ஆட்டோ களிலும், குட்டி யானை, இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தி சென்று அங்கிருந்து ஆரணி, பெரியபாளையம், செங்குன்றம், பொன்னேரி, உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை ஒன்று ₹ 100 முதல் ₹150 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்த அப்பகுதியில் உள்ள உள்ள விவசாயிகள் தெரிவிக்கையில் எங்கள் பகுதியில் இந்த ஆரணி ஆற்றின் நீர்மட்டத்தை நம்பி தாங்கள் விவசாய செய்ய ஆழ்துளை கிணறுகள் அமைத்து அந்த தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த சில நாட்களாகவே சில மணல் கொள்ளையர்கள் அத்துமீறி ஆரணி ஆற்றில் நுழைந்து கரைகளை சேதப்படுத்தியும், மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு ஈடுபட்டு வருவதாகவும், இது மட்டுமல்லாமல் இந்த பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு இருப்பதாகவும் இங்கிருந்து பைப்புகள் வழியாக கிராமத்திற்கு தேவையான குடி தண்ணீர் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் சேமித்து காலை, மாலை என இரு வேலைகளில் சப்ளை செய்யப்படுவதாகவும். தற்போது இப்பகுதியில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதால் நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *