திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைப்படி பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில், உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, இளநிலை தலைமை ஆசிரியை வனிதா செல்வகுமார், பட்டதாரி ஆசிரியை மங்கலம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன்,பொருளாளர் புருஷோத்தமன், மேலாண்மை குழு உறுப்பினர்கள் குலாம் மைதீன், செழியன், சிபிஐ கலியபெருமாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியின் மேலாண்மை குழுவின் செயல்பாடுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. வருகின்ற 24 ஆம் தேதி மேலாண்மை குழுவின் தேர்விற்கான ஆலோசனைகள் நடைபெற்றன.