ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா கல்வி மற்றும் சமுதாய அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அடுத்த கன்னார் பாளையத்தில், காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப் பகுதியில் உள்ள25 மலைவாழ் மக்கள் பயிலும் பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.
மேலும் காரமடை மேற்கு வட்டார பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டு நடைபெற்ற10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா கல்வி மற்றும் சமுதாய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான திரு. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தவத்திரு சுவாமி நாராயணானந்தர் மகராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்,
ஞானசேகரன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்தஅரசு பள்ளி மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து முன்னேற்றமே மூச்சுக்காற்று என்ற தலைப்பில் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் சிறப்புரையாற்றினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. செல்வராஜ், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி |ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.