திராவிடர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்து கொண்டு பேசினார் பின்னர் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி சிறுகனூரில் ஒரு ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர அடியில் ரூ 108 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் பன்முக சிறப்புகளை வரலாற்றில் நிலை நிறுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்க இருக்கும் பெரியார் உலகத்தின் பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.
பெரியாரை உலகமயமாக்குவோம் உலகத்தை பெரியார் மயமாக்குவோம் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நீட் தேர்வை முற்றிலும் நீக்குவது ஒரே தீர்வு நீட் ஒழிப்பை தமிழகத்தை மட்டும் பாதிக்காமல் தற்போது உத்தர பிரதேசம் குஜராத் வரை இந்தியா முழுவதும் நீட் எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
அரசு ஊழியர்கள்
ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்ற ஒன்றிய அரசின் ஆணையை
ரத்து செய்ய வேண்டும்.
பாஜக ஆட்சியை காப்பாற்ற பெவிகால் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்டத் தலைவர் நிம்மதி மற்றும் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.