கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அளகுடி அருகே தடுப்பணை கட்ட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேட்டி:-

காவேரியில் 2லட்சம் கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு அந்த நீர் நேற்று முன்தினம் சீர்காழியை வந்தடைந்தது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள படுகை கிராமங்களான முதலைமேடு திட்டு வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி நேற்று தண்ணீர் சூழ்ந்தது. இந்த கிராமங்களில் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடி முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்

மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த கிராமங்களில் பார்வையிட வருகை புரிந்தார். . இதனை அடுத்து இன்று காலை வெள்ளை மணல், முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்

திட்டு படுகை கிராமங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் . முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கண்காணித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்

எனவும். திட்டு படுகை கிராமங்களில் பயிரிடப்பட்ட தோட்டப்பயிர்கள் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரூ.16 கோடி செலவில் இரண்டு புயல் பாதுகாப்பு மையங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலைமேடு திட்டு, நாதல் படுகை இனைக்கும் வகையில் ரூபாய் 4.கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராதது குறித்த கேள்விக்கு தமிழகத்தில் தற்பொழுது முறையாக நீர் மேலாண்மை கையாளப்பட்டு வருவதாகவும். நீர்வளத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் உடனுக்குடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நீர் பாசன வாய்க்காலில் சென்று கொண்டுள்ளதாகவும். நீர் செல்லும் பாதையில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்படுவதால் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொள்ளிடம் ஆற்றில் அலக்குடி அருகே தடுப்பணை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது குறித்த கேள்விக்கு கடலிலிருந்து உப்பு நீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். யாராவது பிரிந்த நிலையில் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *