தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பிரசித்தி பெற்றஅருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி அமாவாசை அதிகாலையிலேயே கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்னர் தீபாராதனைகள் நடைபெற்றது
தேனி மாவட்டம், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக பக்தர்கள் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய வருகை தந்து கொண்டே இருந்தனர்.
இங்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேருகிறது என்று பக்தர்கள் கூறி வருகிறார்கள். வருகை தந்த பக்தர்களுக்கு காலையில் இருந்தே லட்சுமிபுரம் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்துள்ளார்கள்