ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக காவிரி ஆற்றுக்கு வந்தனர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால் வாய்க்கால்களின் கரைகளின் மீது அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மாகாளய அமாவாசை, புரட்டாசி தை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆடி அமாவாசை என்பதால் காவேரி கரையோரத்தில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வந்தனர்.
காவிரியில் இருபுறமும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது இதனையடுத்து ஆற்றுக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தடை விதித்திருப்பதால் அனுமதி இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருகில் உள்ள வாய்க்கால் கரையோரங்களில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.