கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

மாநிலம் முழுவதும் 100% தேர்ச்சி கொடுத்த பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த பள்ளியில் தாளாளர் மற்றும் முதல்வர்களுக்கு பாராட்டு சான்றிதழில் வழங்கினார்கள்.

விழாவில் எஸ். டி. சீயோன் ஒன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி கொடுத்து மாநில அளவில் சாதனை படைத்திருந்தது.

இப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் அமைச்சர் பெருமக்களின் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *